புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது.

ஆனால் பப்ஜி செயலி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனத்திற்கு சொந்தமானது.

அதற்கான உரிமைகள் அனைத்தும் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பப்ஜி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டத்தை சந்தித்தது.

மேலும், இந்தியளவில் பப்ஜி விளையாட்டினை பலரும் விளையாடி வரும் காரணத்தால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை கொரிய நிறுவனம் மேற்கொண்டுவந்தது.

இந்நிலையில், இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கேமான “பப்ஜி மொபைல் இந்தியா” என்ற பெயரில் செயல்படும் எனவும்; இதற்காக சுமார் 240 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே