இந்தி நடிகர் ஆசிப் பஸ்ராவின் உடல் இமாச்சலபிரதேச்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் தரம்சாலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
53 வயதான ஆசிப் பஸ்ரா அவுட்சோர்ஸ் என்ற அமெரிக்க நகைச்சுவை படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நடித்துள்ள அவர், கிரீஸ்-3, பிக் பிரதர் உள்ளிட்ட படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.