இயக்குநர் வேலு பிரபாகரன் கைது..!

இந்து மதத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்து மதம் குறித்து விமர்சிப்போர் மீதான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதுடன், அதிலிருந்த வீடியோக்களும் நீக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது அடுத்த இந்து மத சர்ச்சையில் சிக்கியுள்ளார் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன்.

இந்து மதம் குறித்து இயக்குனர் வேலுபிரபாகரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து பாரத் என்ற அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சென்னை போலீஸார் இயக்குனர் வேலுபிரபாகரனை கைது செய்துள்ளதுடன் 6 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1682 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே