ஊரடங்கால் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போது மக்கள் மத்தியில் சுனாமியை விட பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

இதைக் கட்டுபடுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் தங்களுடைய எல்லைகளையும் மூடியுள்ளது.

இதனால் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்ட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில், குதூகல செய்தியாக இந்தியாவில் ஆபாச இணையதளத்தளமான பார்ன் ஹப்(Pornhub)  வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவிட்ட நாளான மார்ச் 24ல் இந்தியாவில் ஆபாச வீடியோக்கள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் இருந்ததாகவும்; பின்னர் மார்ச் 27ம் தேதி  வரை பார்ன் வீடியோக்களை பார்த்தவர்கள் 95% சதவீதமாக அதிகரித்ததாக சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட  ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.  

இந்தியாவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தாலே போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு நாட்களில் பார்ன்ஹப் வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பார்ன் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் பார்ன்ஹப் ஆபாச இணையத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பிரபல ஆபாச வலைத்தளம் தனது பிரீமியம் சேவையை அந்நாடுகளுக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு இலவசமாக்கியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே