சென்னையில் கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை..!!

அம்பத்தூர் அருகே போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பழைய எம்.டி.எச் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி.

இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

தேர்வு நெருங்கும் நேரத்தில் பத்மாவதி படிக்காமல் நீண்ட நேரமாக போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பத்மாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே