வழக்கம் போல் இயங்கும் கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு காய்கறி சந்தை இன்றுகாலை முதல் செயல்பட்டு வருகிறது. அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வந்து இறங்கின.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று ஒருநாள் கோயம்பேடு காய்கறி சந்தை இயங்கவில்லை.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், நேற்று முன்தினம் காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கி வைத்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கோயம்பேடு சந்தை மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

இதனையடுத்து காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள் என பலரும் காலை முதலே அங்கு வந்திருந்தனர்.

மேலும் வெளியூர்களிர் இருந்து அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வந்து இறங்கின.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே