சின்மயி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்?

படவாய்ப்புகள் இல்லாததால் பின்னணி பாடகி சின்மயி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் பாடகி சின்மயின் வேட்பு மனு நிராகரிப்பட்ட நிலையில், நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக சின்மயி கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை சாலிகிரமாத்தில் ராதாரவி ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, டப்பிங் யூனியனில் முறைகேடுகள் நடைப்பெறுவதாக சின்மயி கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும்; டப்பிங் மற்றும் பாடல்களில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் யூனியன் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறினர்.

மேலும் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே