வருமான வரி சோதனையில், அரசியல் உள்நோக்கம் உள்ளது – கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய் மீதான வருமான வரி சோதனையில், அரசியல் உள்நோக்கம் உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, விஜய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை கருதினால் அவருக்கு விண்ணப்பம் வழங்கி முறையாக விசாரித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஆனால், திரைப்பட படப்பிடிப்பில் இருந்த அவரை குற்றவாளியை அழைத்து வருவது போல் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தாம் கருதுவதாக தெரிவித்தார். 

விஜய் தமது படங்களில் அரசுகளை விமர்சிப்பதால், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் அவருக்கெதிராக ஒருவிதமான சூழ்ச்சி வலைகளை பின்னுவதாகவும் குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே