பட்டாசுகள் வெடிப்பது கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ராஜஸ்தான் அரசு பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது.

ஒடிஷாவிலும் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் 90 சதவிகிதம் உற்பத்தி தமிழகத்தில் நடைபெறுகிறது.

நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் என தமிழகத்தின் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 

ஒடிசா, ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் இந்த 8 லட்சம் தொழிலாளர்களும் பாதிப்படைவார்கள்.

ஆகவே பட்டாசு விற்பனைக்கும், பட்டாசு வெடிக்கடும் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை ஏற்படாது என்றும், காற்று மாசு , ஒலி மாசு விதிகளிபடி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன என்றும் உறுதி அளித்திருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே