தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் அவ்வப்போது சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த கருத்துக்கள் தெரிவிப்பதுடன், மேடைகளில் அரசியல் பேசுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என பல்வேறு நேரத்தில் பேசபட்டு வந்த நிலையில் தற்போது அவரது பெயரில் கட்சியானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் ஆனது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன் பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திரசேகரன் பொருளாளர் சோபா என விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே