மதுரையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மதுரையில் புதிதாக மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளிமாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 52 பேர் குணமடைந்தனா். 

அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், புதிதாக மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி சனிக்கிழமை செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,685 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் 364 சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 13,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 877 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே