ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி, வேதாரண்யம், ஜெயம்கொண்டான், ஆரணி உள்ளிட்ட பல இடங்களில் குடிநீர், உணவு வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே