முதல்வர் பழனிசாமி திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு சாமானியர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறனர்.
அதனாலேயே இங்கு ஏழுமலையானின் சொத்துக்கள் அனைத்தும் கணக்கிலடங்காதவையாக உள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை கோயிலுக்கு சென்ற அவருக்கு தேவஸ்தானம் அதிகாரிகள் மேளதாளங்களுடன் சிறப்பு வரவேற்பளித்தனர்.
இதை தொடர்ந்து முதல்வர், வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலில் இரவு 7 மணிக்கு சாமி தரிசனம் செய்தார்.
அத்துடன் அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல்வர் பழனிசாமியின் தாயார் இறந்த நிலையில் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக பாஜகவின் எல். முருகன் திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.