“நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்துவந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி” – அறிஞர் அண்ணா
இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமான அறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்ததநாள் (15-09-2020)இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜ், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி உள்ளிட்டவர்களும் அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்துவந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி” – அறிஞர் அண்ணா.
அங்ஙனமே ஆகட்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்தம் பிறந்தநாளில் அவரை மனதார வணங்கி போற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.