முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் பிரதமர் மோடியின் எடுபிடிகள் : உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியின் எடுபிடிகள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காடு அருகே கீழதேவநல்லூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி குப்பைகளை சுத்தம் செய்ததை படம் பிடிக்க மும்பையில் இருந்து 15 பேர் கொண்ட குழு வரவழைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இதுவரை ரகசியமாக இருப்பதாக கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே