மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி..!!

முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது.

இந்த ஒதுக்கீட்டின் மூலமாக, 405 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியதன் பேரில், நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை 7.5% ஒதுக்கீட்டுடன் நடைபெறும் என அரசு அறிவித்தது.

அதன் படி, இன்று காலை 9 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது.

முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், உள்ஒதுக்கீட்டின் மூலமாக இன்று 18 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் 18 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே