மே 13 வரை சென்னையில் எவ்வற்றுக்கெல்லாம் தடை ??

சென்னையில் மே 13-ம் தேதி வரை பொது இடங்களில் கூட, பேரணி, மனித சங்கிலி போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

இன்று மட்டும் தமிழகத்தில் 121 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 2058 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் 4 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ள நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பாதித்திருக்கும் நிலையில் கோயம்பேடு சந்தையை மூடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மே 13ஆம் தேதி வரை கூட்டம் கூடுதல், பேரணிகள், மனிதசங்கிலி, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் 15 நாட்களுக்கு பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவைகள் நடத்த அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பகுதிகள், சாலை, தெருக்களில் கூடவும் சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் மே 13 பகல் 1 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே