மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா..!!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விடுதியில் தங்கியிருந்தவர் என்பதால் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை ஐஐடி, சென்னை அண்ணா பல்கலைக்கழம் மாணவர்களை தொடர்ந்து மதுரையிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த 9ஆம் தேதி 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களுடன் தொடர்பிலிருந்த 444 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 87 மாணவர்கள் உட்பட 104 நபருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் பரவல் குறையாத சூழலில் கல்வி நிலையங்களை திறப்பது உகந்தது அல்ல என்று பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய் பரவாமல் தடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே