அமராவதி அணையில் இருந்து நாளை முதல் 11 நாள்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிறப்பித்திருக்கும் உத்தரவில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகரம் வரை குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு 06.08.2020 முதல் 16.08.2020 வரை 11 நாட்களுக்கு 1210 மி.க.அடி தண்ணீர் மற்றும் அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, 06.08.2020 முதல் 20.08.2020 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர், மொத்தம் 1780 மி.க. அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.