சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்த காரணத்தால் கடந்த சில நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயிருந்தது.

குறிப்பாக, சென்னையில் சில சாலைகள் முழுவதும் பழுதடைந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. பல இடங்களில் நீரில் மிதந்தபடி வந்து நிவாரணப் பொருட்களைப் பொதுமக்கள் வாங்கிய சம்பவங்களும் நடைபெற்றன.

இதன் காரணமாக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டது. ஞாயிறு வரை இலவச உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணயாளார் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்த நிலையில், இன்று (15.11.2021) காலைமுதல் அம்மா உணவகத்தில் மீண்டும் உணவுக்கு கட்டணம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த கனமழையின் காரணமாக இதுவரை 8 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே