#BREAKING : தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமுடக்கம் என்பதால் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது

தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது.

குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை முழு பொதுமுடக்கம் முடியும் வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே