பெட்ரோலில் 10% எத்தனால் – வாகனங்களை கவனமாக பராமரியுங்கள்..!!

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகத்தால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுசூழலை பாதுக்காக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்துவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். 

இதனால், வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும்.

ஆகையால், தரக்கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பெட்ரோலினை விநியோகம் செய்து வருகின்றோம்.

பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என்றும் எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே