தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்.,24 முதல் விருப்ப மனு பெற்று அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர், தலைமை கழகத்தில் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

அதிலுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

தமிழகம் – ரூ.15 ஆயிரம்
புதுச்சேரி – ரூ.5 ஆயிரம்
கேரளா – ரூ.2 ஆயிரம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே