சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

பத்திரிகை, கல்வி, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை புரிந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1.34 கோடி மதிப்பில், 60 சென்ட நிலத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கலச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மணிமண்டபத்தையும், சிவந்தி ஆதித்தனாரின் சிலையையும் திறந்து வைத்தார்.

அவரது சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த மணிமண்டபத்தில் நூலகம், பூங்காவும் அமைந்துள்ளது.

அங்குள்ள நூலகத்திற்கு சென்று முதல்வரும், துணை முதலவரும் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே