திமுக எம்.பி கனிமொழியிடம் நீங்கள் இந்தியரா என கேட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க CISF உத்தரவு!

ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் சிஐஎஸ்எஃப் பதிவிட்டிருப்பதாவது:

“இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்-இன் கொள்கையல்ல.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிந்தி தெரியாததால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, நீங்கள் இந்தியரா என தன்னைப் பார்த்து சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டதாக கனிமொழி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே