தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு..!!

தமிழகம் முழுவதும் இதுவரை 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன; 2743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 6,29,43,512 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைந்தது.

234 தொகுதிகளுக்கும், 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை, 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 548 ஆண்களும், 87 பெண்களும், ஒரு திருநங்கை என மொத்தம் 636 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7,255 வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத மனுக்கள், தேவையான விவரங்களை முறையாக பூர்த்தி செய்யாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில், 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,492 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இன்று மாலையே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன;

2743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே