தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா..!!

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதியானது..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்கும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக தேமுதிக வேட்பாளர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே