ELCTION LIVE UPDATE : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னிலை நிலவரம்

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மந்தம்; இதுவரை தபால் வாக்கு நிலவரம்கூட அறிவிக்கப்படாததால் வேட்பாளர்கள் அதிருப்தி

கரூர் மாவட்டத்தில் தோகைமலை ஒன்றியப்பகுதியில் 4 மணி நேரமாகியும் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் : ​

  • பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி

ஓசூர் :

  • ஓசூர் ஒன்றியத்தில் பதிவான தபால் வாக்குகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிப்பு.

நாமக்கல் :

  • நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் பகுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 1-வது வார்டில் திமுக கட்சி சார்பாக போட்டியிட்ட மனோகரன் என்பவர் வெற்றி பெற்றதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என கூறி 3 ஒன்றியங்களில் செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 99 இடங்களில் முன்னிலை

  • தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 99 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும், தேமுதிக மூன்று இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றிருக்கின்றன.

தேனி :

  • தேனி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான போட்டியில் 10-ல் 3 இடங்களில் அதிமுக முன்னிலை

குன்னூர் :

  • குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூடிய காட்டெருமைகள்; கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஓட்டம்!

சேலம் மாவட்டம் – 7 இடங்களில் திமுக முன்னிலை

  • சேலம் மாவட்டம் வீரபாண்டியில் 7 இடங்களில் திமுக முன்னிலை

சிதம்பரம் :

  • சிதம்பரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
  • சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக முன்னிலை :

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் 4-வது வார்டில் திமுக முன்னிலை.
  • ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 2 இடங்களிலும் திமுக முன்னிலை.

திண்டுக்கல் :

  • கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாதவை; ஒட்டன்சத்திரத்தில் ஒரே ஒரு தபால் வாக்கு மட்டுமே செல்லத்தக்கதாக அறிவிப்பு

நாகை :

  • நாகை மாவட்டம் பாலையூரில் 5, 6-வது வார்டுகளில் பதிவான 270 வாக்குகளில் 269 தான் உள்ளன. ஒரு வாக்குசீட்டு மாயமாகியுள்ளது.

நாமக்கல் :

  • வெண்ணந்தூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்.பி சுந்தரம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கன்னியாகுமரி :

  • கன்னியாகுமரி – மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட மேல்புறம் மாவட்ட ஊராட்சி ஒன்றாவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் லீமா ரோஸ் முன்னிலை

பாஜக முன்னிலை :

  • நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 9-வது வார்டில் பாஜக முன்னிலை

இராமநாதபுரத்தில் அதிமுக முன்னிலை :

  • இராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தலா ஒன்றில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

திமுக நான்கு இடங்களில் முன்னிலை :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவி தேர்தலில் 4 இடங்களில் திமுக முன்னிலையில் இருப்பதாகவும், 2 இடங்களில் அதிமுக முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 2 இடங்களிலும்; அதிமுக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்றும்;

சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே