5 வீரர்களின் ஒப்பந்தத்தை முறித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 5 பேரின் ஒப்பந்தம் முறித்து கொள்ளப்படவுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

13-வது ஐ.பி.எல். சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.

ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல மோகித் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய் ஆகிய 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வீரர்களை விடுவிப்பதின் மூலம் அந்த அணி ஏலத்தின் போது 10 கோடி வரை கைவசம் வைத்திருக்க முடியும். 

மோகித் சர்மா  5 கோடிக்கு எடுக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே