சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஒத்திகை இரண்டாம் கட்டமாக தொடங்கியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகைதொடங்கியது.

ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, பெரியமேடு மருந்து சேமிப்பு கிடங்கில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்துள்ளார். 

செங்கல்பட்டிலுள்ள தடுப்பு மருந்து மையம், ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகளை போட எவ்வளவு நேரம் ஆகும் என ஒத்திகை பார்க்கப்படும்.

தடுப்பூசி ஒத்திகையில் காத்திருப்போர் அறை , தடுப்பூசி போடும் அறை போன்றவை ஒத்திகை பார்க்கப்படும்.

கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது உள்ளிட்டவை பற்றி ஒத்திகை பார்க்கப்படவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே