தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தில்லியில் இது தொடர்பாக நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் பேசியதாவது, வீட்டில் இருந்தாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று வீட்டிற்குள் வெளியாட்களை சேர்ப்பதையும் சில காலத்திற்கு தவிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தில் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு மருந்துகள் அவசர காலமருந்தாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே