புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் விதிமுறைகளில் மாற்றம்!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்பட்டு வரும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் அதிகம் பேர் பயணிக்கும் வகையில் விதிமுறைகளில் ரயில்வே அமைச்சகம் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.

மேலும் அவர்கள் பயணிக்க ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சிறப்பு ரயிகளில் புதிதாக 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதால் 72 பேர் பயணிக்கக் கூடிய ரயில் பெட்டிகளில் 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

அனைத்து பெட்டிகளிலும் நடு படுக்கையை பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில் தற்போது ரயிவே அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய  மாற்றத்தின் படி மொத்த படுக்கை வசதிகளின் அடிப்படையில் இனி பயணிகள் சிறப்பு ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. 

அதாவது ஒரு பெட்டியில் இனி 72 பேரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை புறப்படும் மாநிலத்தில் இருந்து சென்று செரும் இடம் வரை எந்த நிறுத்ததிலும் நிக்காமல் செல்லும் வகையில் இருந்த சிறப்பு ரயிகள், தற்போது அதிகபட்சமாக மூன்று நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மே 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயிகள் மூலம் 4,50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே