தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; அதிகபட்சமாக ஏற்காட்டில் 9 செமீ மற்றும் தருமபுரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே