தமிழகம் வந்த மத்தியக் குழு சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு..!!

சென்னையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

நிவர் புயல் அதனைத் தொடர்ந்து புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் நிலைகுலைந்துள்ளன.

வீடுகள், விவசாய நிலம் என கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

இந்நிலையில் சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளனர். 

நேற்று சென்னை வந்த குழுவினர் இன்று இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு பணியை தொடங்கினர்.

ஒரு பிரிவினர் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு பிரிவினர் தமிழகத்தின் பிற இடங்களில் ஆய்வு செய்தனர்.

குழுவில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே