தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அண்மையில் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்பொழுதும் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே