நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலைமுதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே