தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் கோடைகாலத்தில் நிலவும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. 13 மாவட்டங்களில் வெப்பம் உச்சத்தை தொட்டு மக்களை வாட்டி வதைத்தது. இத்தகைய சூழலில் தான் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிலோமீட்டர் சூறை காற்று வீசி கனமழை பெய்யக்கூடும் என்றும் மதுரை, திருச்சி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்டங்களில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. அதன் படி, ஒரு சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே