மதுரை எய்ம்ஸுக்கு மத்திய கல்வித்துறை பிரதிநிதி நியமனம்..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக சென்னை ஐஐடியின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்’ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக சென்னை ஐஐடியின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்வி தொடர்பான நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே