தர்பார் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம், தாக்கல் செய்துள்ள மனுவில், ரஜினிகாந்த நடிப்பில் லைக்கா தயாரித்த 2.O படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாய் ஆகிவிட்டதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

தங்களுக்கு வழங்க வேண்டிய இந்த தொகையை வழங்காமல், லைக்கா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே