இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை..!!

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்ட்டா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்.

இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தான். இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

அதில், இலங்கை தாதா அங்கொட லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமானது. கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான “சோல்டா” என்ற அசித ஹேமதிலக, போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளான். அப்பொழுது அவனை இலங்கை போலீசார் சுட்டுகொன்றனர். அதனை இலங்கை மேற்கு மாகாணத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி தேசபண்டு தென்னகூன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே