தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.88 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 15 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,777-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து புதிதாக 1,407 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,66,261-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,336 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,09,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 3,871-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே