காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா? – ஹெச்.ராஜா

ஆன்லைன் கல்வி சில காலத்திற்கே பிறகு ஆப்லைன் சென்றுவிடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்.

காதலால் ஒரு பெண் தற்கொலை செய்தால் காதலை தடை செய்ய கோரிக்கை வைப்பார்களா? ஆன்லைன் கல்வி சில காலத்திற்கே பிறகு அது ஆப்லைன் சென்றுவிடும்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் 10லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையால் கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது கோவில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது. 

அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது. இந்துக்களை இந்து அறநிலையத்துறை சோதிக்கிறது

பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர்.

ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது. பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜக டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜா தான்” எனக் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே