அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி கேரள அரசு பேருந்து மீது மோதிய கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்தை நோக்கி கேரள அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பேருந்து சென்றபோது, எதிர்திசையில் கோவையிலிருந்து சேலத்தை நோக்கி டைல்ஸ் கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது ஏறி, திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர், ஐந்து பெண்கள் என மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் கண் அயர்ந்ததன் காரணமாகவே கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே