CAA போராட்டம் : பாகிஸ்தான் வாழ்க என கோஷம் போட்ட பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்…

பெங்களூரில் AIMIM இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி பேசும் போது, அமுல்யா என்ற பெண் மேடையேறி வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார்.

அவரை தடுக்க ஓவைசி முயன்ற போதும் அப்பெண் கேட்கவில்லை.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த பெண்ணின் பேச்சுக்கு மேடையிலேயே ஓவைசி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அந்தப்பெண்ணுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், அமுல்யாவை தேசத்துரோக வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் கருத்தை மறுத்த அவர், இந்தியா ஜிந்தாபாத் என்பதே தமது கொள்கை என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே