ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு : கவிஞர் வைரமுத்து

வட மொழியான சமஸ்கிருதத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கும் மத்திய அரசு, மூத்த மொழியான தமிழுக்கு குறைந்து நிதியையே ஒதுக்குவதாக கவிஞர் வைரமுத்து குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த “உலகத் தமிழ் கவிதை ஓராயிரம்” என்ற நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

சபாநாயகர் சிவக்கொழுந்து கலந்துகொண்டு நூலினை வெளியிட கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, மத்திய அரசு தமிழுக்கு உரிய பெருமையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே