வெளிமாநிலத் தொழிலாளர்கள் செல்ல பேருந்துகள் இயக்கம் துவங்கியது!

வெளிமாநில நபர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகம் துவங்கியது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே17 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு, ஆரஞ்ச், பச்சை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தியது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ள நிலையில், சில நிபந்தனைகளோடு பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 1,082 சொகுசு பேருந்துகள் உள்ளன.

இந்த பஸ்களில் மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தை தவிர்த்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 30 பேரும், கேரளாவை சேர்ந்த 20 பேர் என 50 பேர் அவர்கள் சொந்த ஊருக்கு பத்திரமாக அரசு பஸ்களில் அனுப்பட்டனர்.

மேலும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லாத நபர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளதால் அரசு அனுமதி வழங்கியிருக்கும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து கழகத்திற்கு அதற்குரிய கட்டணத்தை செலுத்தினால் அவர்களை பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரவும் மற்றும் இறக்கிவிடவும் அரசு போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே