#Budget2020 : பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

கல்வித்துறைக்கு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதிமையமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

2020 – 2021 ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாட்டில் புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்வி கற்க வாருங்கள் திட்டம், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் குறிப்பிட்டார்.

மேலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பொறியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.

150 பல்கலைக்கழங்களில் புதிய பாடப்பிரிவுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

முன்னணி பல்கலைக்கழங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.

மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும். 

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரிய மருத்துவமனைகளிலும் முதுகலை மருத்துவ கல்வியை வழங்க ஊக்கம் வழங்கப்படும்.

தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே