கொரோனா பரவலை தடுக்கவே இ-பாஸ் முறையை அரசு கடைபிடிக்கிறது… முதல்வர் பழனிசாமி !!

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு இ-பாஸ் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கவே இ-பாஸ் முறையை தமிழக அரசு கடைபிடிக்கிறது என விளக்கம் அளித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

மேலும் மண்டலங்களுக் இடையேயான பொது போக்குவரத்தை அனுமதித்ததால் தான் கொரோனா அதிகம் பரவியது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பேருந்து சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கையின்படி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். அதேபோல சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராயவும் குழு அமைக்கப்பட உள்ளது. என தெரிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே