முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.382.89 கோடி நிதி வந்துள்ளது..! – தமிழக அரசு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து சென்று கொண்டே இருக்கிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பொதுமக்களால் பணிகளுக்கு செல்ல முடியவில்லை. நிறுவனங்களும் இயங்கவில்லை.

இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் பெரிய நிறுவனங்கள் , முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கலாம் என்று அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பல நிறுவனங்கள் வழங்கியது.

ஆனால் அரசு வெளிப்படையாக இல்லாமல் , நிவாரண நிதி எவ்வளவு வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஜூன் 25 வரை ரூ.382.89 கோடி கிடைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரண நிதி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக நிதித்துறை துணை செயலரும், முதல்வர் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளா செல்வி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் ரூ.10 லட்சத்திற்கு மேல் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் இணையதளத்தில் உள்ளது.

ரூ. 10 லட்சத்துக்கு குறைவாக நிதி கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிப்பதில் சிரமம் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே