பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இவரது தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதி சடங்கில் கூட இர்பான் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார்.
இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்தார்.
இந்த நிலையில் இர்பான்கானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார்.
பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மும்பை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.
2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இர்பான் கானின் மறைவு செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.